எனது அன்பார்ந்த நபி

அறிமுகம்

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (ஹம்த்) உரியது. அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவனே எல்லாப் பொருட்களையும் நிலைநிறுத்துகிறான். அவனே எல்லாப் பொருட்களையும் அச்சத்திலிருந்து பாதுகாக்கிறான்.

எல்லா ஸலாத்தும் (பிரார்த்தனைகளும்) ஸலாமும் அவனது பிரியமான நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக), அவர்கள் ஒவ்வொரு விதத்திலும் மனிதர்களில் மிக அழகானவர்களாகவும், மிக உயர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

அறிவையும், ஞானத்தையும், நல்ல ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தும் அவரது 'ஆல்' (குடும்பத்தினருக்கும்), உறவினர்களுக்கும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக. ஆத்மாக்களைக் குணப்படுத்தும் அவரது அழகிய முகத்தைப் பார்த்து, அவரது மதிப்புமிக்க வார்த்தைகளைக் கேட்டு, அவர்களை நேசித்து பின்பற்றுவதன் மூலம் மனிதர்களில் மிகவும் விலைமதிப்பற்றவர்களாக மாறிய அவரது அஸ்ஹாப்1 (ரழியல்லாஹு தஆலா அன்ஹும்/ அல்லாஹு தஆலா அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) அனைவர் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.

அல்லாஹு தஆலா, பூமியில் உள்ள அனைத்து மக்கள் மீதும் கருணை கொண்டு, அவர்களுக்கு பயனுள்ள பொருட்களை படைத்து அனுப்புகிறான். மறுமையில் (ஆகிரத்) ஜஹன்னம் (நரகத்திற்கு) செல்லும் முஸ்லிம்களை அவன்2 மன்னிப்பான்; அவர்களை ஜன்னாவில் (சுவர்க்கத்தில்) நுழையச் செய்வான். முஹம்மத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹு தஆலாவின் நபி3,ரஸூல்4 (தூதர்) மற்றும் ஹபீப் (அன்பானவர்) ஆவார்கள். அவர்கள் மனித குலத்தின் ஸய்யித் (தலைவர்) ஆவார்கள். நிச்சயமாக யார் ஈமான் கொண்டு, (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் மிகச் சிறந்த உம்மத்தினராக (சமூகத்தினராக) இருக்கின்றனர்.

ஜனாப் அல்-ஹக் (அல்லாஹு தஆலா) எம்மீது பரிதாபப்பட்டு, அவருடைய (முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின்) உம்மத்தில்5 ஒருவராக ஆக்கி, அவனது மிகப்பெரிய பாக்கியத்தை அடையச் செய்தான். நாம் அவனுக்கு அடிபணிந்து, அவரைப் பின்பற்ற வேண்டுமென அவன் தெளிவாகக் கூறியுள்ளான். இந்த மகத்தான அருளுக்காக நாம் எவ்வளவு அவனைப் புகழ்ந்தாலும், அவனுக்கு நன்றி சொன்னாலும் அது போதாது.

அல்லாஹு தஆலா நமது தலைவரான சர்வார் அல்-அஃலம் (உலகங்களின் தலைவர்) முஹம்மத் (ஸல்-அல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருள்பாளிக்கப்பட்ட நூரை (ஒளியை) அவன் எதையும் உருவாக்குவதற்கு முன்பே படைத்தான். குர்ஆன் அல்-கரீமில், நமது தலைவரான நபியை நோக்கி, "உங்களை உலக மக்கள் அனைவருக்கும் கருணையாகவும், அருளாகவும் அனுப்பினோம்" என்று கூறப்பட்டுள்ளது. (ஸூரா அல்-அன்பியா: 107) ஒரு ஹதீஸ் அல்-குத்ஸில்6, "நீங்கள் இல்லாவிட்டால், நான் எதையும் படைத்திருக்க மாட்டேன்" என்று கூறப்பட்டுள்ளது.

ஈமானின் (நம்பிக்கை) உண்மையான கோட்பாடு, “ஹுப் ஃபில்லாஹ் மற்றும் புக்த் ஃபில்லாஹ்”, அதாவது அல்லாஹுத்தஆலாவின் அன்புக்குரியவர்களை நேசிப்பது மற்றும் அவனது எதிரிகளை வெறுப்பது. ஹுப் ஃபில்லாஹ் மற்றும் புக்த் ஃபில்லாஹ் இல்லாமல், எந்த இபாதத் (வணக்க வழிபாடும்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, 'உலகங்களின் தலைவரை' நேசிப்பது பர்ள் (கட்டாயமானது), அத்துடன் அவருடைய அன்பை நம் இதயங்களில் வைக்குமாறும், அவருடைய அழகிய அஃக்லாக் (தார்மீக குணங்கள்) மூலம் நம்மை அலங்கரிக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளோம். இந்த அன்பைத் தொடர, நம் தலைவரான நபியின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் புத்தகங்கள் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டு வருகின்றன. அவை நமது தலைவர், நபியவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் நூல்களாக அல்லது, அவர்களது கண்ணியத்துக்குரிய பெயரால் அருளப்பெற்ற நூல்களாக உள்ளன. இந்தப் பாக்கியத்தை அடைவதற்கும், நம் இதயங்களை அவரது அன்பால் நிரப்புவதற்கும், அகிலத்தின் அருள்பாளிக்கப்பட்ட வாழ்க்கையின் சுல்தான், நம் தலைவர் ரஸூலுல்லாஹ்வைப் படிக்குமாறு நாம் பரிந்துரைக்கிறோம், இது அஹ்ல் அஸ்-ஸுன்னத் அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து நீண்ட ஆய்வுகள் மேற்கொண்டு தயாரிக்கப்பட்டது, நாமும் நம் தலைவர் ரஸூலுல்லாஹ்வின் அருள்பாளிக்கப்பட்ட வாழ்க்கையை எழுத முயற்சித்தோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

ஜனாப் அல் ஹக் நமது இதயங்களை நமது தலைவரான நபியவர்கள் மீதுள்ள அன்பால் நிரப்பட்டும், அஹ்ல் அஸ்-ஸுன்னத் அறிஞர்களால் அறிவிக்கப்பட்ட பாதையில் நம்மை வைத்திருக்கட்டும்! ஆமீன்.

கலாநிதி. என்வர் ஓரன்